கேள்விகள்:
- வடிவமைப்பு என்றால் என்ன? வடிவமைப்பு சரியில்லை என்றால் என்ன?
- சரியாக வடிவமைக்காத ஒரு கட்டிடத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? 1200 கோடி ரொம்ப சின்ன தொகையோ?
- ஜார்ஜ் கோட்டையில் போதுமான இடம் இருக்கிறதா? இல்லாவிட்டால் ராணி மேரி கல்லூரியில் கட்டிடம் கட்ட திட்டமிட்டதேன்?
- இன்னொரு தலைமை செயலகம் கட்டுவீர்களா?
- கான்ட்ராக்ட் யாருக்கு?
- பச்சை வண்ண கட்டிடமா?
- அப்போ எண்ணை தொட்டியை என்ன செய்வீர்கள்?
- ஜனநாயகத்தின் மூன்றாவது தூணான ஊடகங்கள் இதை கேள்வி கேட்குமா?
- மானமுள்ள ரோஷமுள்ள இன்னும் பல உள்ள தன்மான தமிழன் ஆட்சியாளர்கள் எது செய்தாலும் கேள்வி கேட்காமால் இருப்பது ஏன்?
டிஸ்கி:
பதிவர் திமுக அனுதாபி இல்லை.
போய்யா - எனக்கு சோறுதான் முக்கியம் என்போர் கவனத்திற்கு: மறுபடியும் நம் வரிப்பணம் 2000 கோடி வீணாகி உங்கள் சோற்றுக்குத்தான் உலை.
4 comments:
1.ஒரு (மூட?) நம்பிக்கையின் படி அதில் பண்யாற்றினால் கெடுதல் விளையலாம்.
2.முந்தைய அரசின் செயல்கள் தவறு என்று கூறியதில் இதுவும் அடக்கம்
3.இபோதைக்கு அந்த இடம் வேண்டாம்.முதல் கேள்வியின பதிலை பார்க்கவும்.
4,5&6.எந்த இடம்,வடிவமைப்பு,வண்னம் வேண்டுமோ பிறகு பார்க்கலாம்.
7.ஒரு வழி ஏற்கெனவே முடிவெடுக்கப் பட்டு விட்டது.
8&9.கேட்டால் அன்போடு கவனிக்கப் படுவார்கள்.
__________
மக்கள் 5 வருடம் முந்தைய அரசு செய்தவற்றுக்கெல்லாம் பொறுமையாக இருந்த மாதிரி இப்ப்போதும் பொறுமையாக இருந்து ,5 வருடத்திற்கு பிறகே தீர்ப்பு அளிப்பார்கள்.அத்னை அப்போது பார்த்து கொள்ளலாம்.ஆகவே ரொம்ப அலட்டி கொள்ள அவசியம் இல்லை.முகமது பின் துக்ளக படம் பார்க்க பரிந்துரை செய்கிறேன்
http://saarmovies.blogspot.com/2011/05/blog-post_5514.html
நன்றி
அடுத்தவருக்கு பெருமை கிடைக்க கூடாது என்ற காழ்பு.
இதெல்லாம் சமுக பொறுப்பின்மைக்கு அடையாளம்.
இதை கேட்க, சிந்திக்க கூட மனமில்லாத, உழைப்பு, வெயில் என்றல் என்ன என்று அறியா ஒருவர் முதலமைச்சர்.
இதை சரி என்று விவாதிக்க ஏராளமானோர். எது சரி எது தவறு என்பது அவரவர் கண் நோட்டம்.
அதனால் இத்தகைய நிலை நேர்கிறது. பெரும்பான்மையோர் தவறான வழி காட்டுதலில் இப்படி முடிவு செய்து விடலாம். இத்தகைய சூழல் இன அழிப்புக்கு வித்திடுகிறது. இனம் அழிந்தால் என்ன என்றும் கேட்பார்கள்.
எப்படியோ இன பகைவர், மகிழ்ச்சியில் உள்ளனர் இனம் மேலும் இழிவுபடுத்தபடும் என்ற நம்பிகையில்.
@சார்வாகன்
எதிர்வினை (reactive) மனப்பான்மையில் இன்னும் எவ்வளவு நாள் இருப்பது? தொலைநோக்கும் தட்டிக்கேட்கும் தைரியமும் இருந்தால், மாற்றம் வர வழியுண்டு இல்லையா?
அனானி,
நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியே. எப்படியோ ஒழியட்டும் என்று விடாமல் நம்மால் ஆனதை செய்வோம்.
Post a Comment