Monday, December 27, 2010

இதோ இன்னுமொரு காதல் கவிதை

Copyright: 7junipers.com
 இதோ இன்னுமொரு காதல் கவிதை
நீங்கள் சர்வ அலட்சியத்துடன் இதை தாண்டி போகலாம்
கசக்கி குப்பையிலும் எறியலாம்
எச்சிலும் துப்பலாம்
கவிதாமூர்த்திகள் எள்ளலும் செய்யலாம்
ஏற்கனவே காதலில் நொந்தவர்கள் கண்ணீரிடலாம்

எனக்கு  கவிதை எழுத அள்ளி கொடுத்தவள்
சொல்லிய சொல்லைவிடவா
உங்கள் எதிர்வினை
என்னை கொல்ல போகிறது?